முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கொடிக்குளம் பெரிய ஏரி தூர்வாரும் பணி துவக்கம்

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம் பெரிய ஏரியை சுமார் 55 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி துவங்கியது.

இந்தத் திட்ட துவக்க விழாவில் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, மணமேல்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் துரைமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் அலி, ஏரி தலைவர் காசிநாதன் தேவர், தாசில்தார் வில்லியம், மோசஸ், செல்வம் இளையராஜா, சங்கர் பில்லை, அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஏரி தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ள சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 72 = 78