திமுக மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்

கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர திமுக மற்றும் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நலிவுற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின்  97 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர திமுக  மற்றும் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவிற்கு கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் கலந்துகொண்டு கிருஷ்ணகிரியில் நலிவுற்ற ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டைகள், பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில்  திமுகவை சேர்ந்த  பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =