காட்பாடியில் சோதனைச் சாவடிகள் இருந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

காட்பாடியில் சோதனைச் சாவடிகள் இருந்த பகுதிகளில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் சித்தூர் பஸ் நிலையம், குடியாத்தம் ரோடு மற்றும் மாநில எல்லை சோதனைச் சாவடியான கிறிஸ்டியான் பேட்டை ஆகிய சோதனைச் சாவடி பகுதிகளில் போலீசார் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அங்கு, போலீசார் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தற்போது பேருந்துகள், ரெயில் போக்குவரத்தில் சில தளர்வு செய்யப்பட்டு, இயக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனை சாவடிகள் நேற்று மாலை அகற்றப்பட்டன. அப்பகுதிகளுக்கு காட்பாடி தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்தப் பணியை, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் பார்வையிட்டார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 46 = 53