தஞ்சை அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் மதரீதியாக பகைமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்த காட்மேன் திரைபடத்தை தடை செய்ய வலியுறுத்தி புகார்

மதரீதியாக பகைமையை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், பட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தணர் முன்னேற்ற கழகம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

காட்மேன் என்கிற ஆன்லைன் திரைப்படம் ஒன்றின் டிரைலர் சமீபத்தில் தனியார் ஆன்லைன் சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரைலரில் பிராமணர்களைபற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறான கருத்துகளும் கொச்சையான காட்சிகளும் வசனங்களும் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் தஞ்சாவூரிலும் கண்டன குரல் எழுந்துள்ளது.

மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலம் வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல் அவதூறாக கொச்சையாக சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, நடிகர்கள், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோர்  மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் அந்தணர் முன்னேற்ற கழகம் தஞ்சை மாவட்ட செயலாளர் புவனேஷ் தலைமையில் தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் காயத்ரி வைத்தியநாதன், தொகுதி மாணவரணி செயலாளர் ரத்தினசபாபதி, இணை செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் உறுப்பினர்கள் குமரகுரு, சுந்தரேசன், கணேஷ்குருக்கள், கோபி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 + = 70