YSR ஜெகன் மோகன் பேரவையின் சார்பில் நிவாரண உதவிகள்

YSR ஜெகன் மோகன் பேரவையின் சார்பில் மாநில தலைவர் பாஸ்கரன், செயலாளர் பிரேம்குமார், இளைஞர் அணி செயலாளர் சதாம் கான் ஆகியோரின் ஆலோசனை படி, சேலம் மாவட்டம் YSR ஜெகன் மோகன் பேரவையின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் அய்யோத்தியாபட்டனம், வரகம்பாடியில் குறவர் காலனியில் சுமார் 250 குடும்பத்தினர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பு கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக YSR ஜெகன் மோகன் பேரவையின் மாநில தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சுரேஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.

சேலம் மாவட்ட தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மேலும் பேரவையின் நிர்வாகிகள் மகளிர் அணி தலைவி திவ்யா பிரகாஷ், பொருப்பாளர் மோகன் குமார், துணை செயலாளர் பிரகாஷ், இனைச் செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் சிவலிங்கம், இளைஞர் அணி தலைவர் சாம், துணைத் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் பிரசாத், இனைச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் அருள் கார்த்திக், சேலம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வசந்த்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சர்மா, அமைப்பாளர் கோபி, ஆத்தூர் சட்டமன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் சதீஷ், ஆத்தூர் சட்டமன்ற இணை அமைப்பாளர் கார்த்தி, கெங்கவல்லி சட்டமன்ற மாணவரணி செயலாளர் கோகுல், சேலம் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் அன்பு, ஓமலூர் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் சதீஷ், ஓமலூர் ஒன்றியம் பொருளாளர் சுரேஷ், ஓமலூர் ஒன்றிய து.தலைவர் ரா.சந்தோஷ் குமார், ஓமலூர் ஒன்றிய உறுப்பினர் கோ.மணி, ஓமலூர் ஒன்றிய உறுப்பினர் P.S.சதீஷ், மகளிர் அணி செயலாளர் கவிதா, துணைச் செயலாளர் சுகந்தி, பொருளாளர் அஜித்தா மோகன், அமைப்பாளர் எலிசபெத், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வசந்த்ராஜ் விழா வரவேற்புரை ஆற்றினார், மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் சுமார் 250 குடும்பத்தினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த பகுதி மக்கள் அனைவரும் நமது பேரவைக்கு மனதார நன்றியைத் தெரிவித்தனர். ஜெகன் மோகன் முதல்வராக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சி சிறப்புமாக நடைப்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 9 =