மதுரை பழங்காநத்தத்தில் மேம்பால பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

மதுரை மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ் நகர் ஆகிய மூன்று பகுதிகளையும் இணைக்கும் மேம்பால பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ஆய்வு செய்தார். அருகில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சார்லட் மேரி, உதவி கோட்ட பொறியாளர் லாவண்யா, உதவி பொறியாளர் நாதிஸ் குமார் இவர்களுடன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தார் உள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் குமார், ஏ.வி.எஸ் பிரிட்டோ, ராஜாராம், லக்கி முருகன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6