பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலக மேல் மாடியில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திய ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் பேசும்பொழுது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 50 சதவீத நிதியை குடிநீர், சுகாதாரத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்றும் மேலும் நிதி பற்றாக்குறை உள்ள காரணத்தினால் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக நிதியை பெற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதுகாடு ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் குழ.செ.அருள்நம்பி மும்முனை மின்சாரம் எங்கள் பகுதியில் முறையாக விநியோகிக்கப்படவில்லை இதுபற்றி கடந்த கூட்டத்தில் பேசினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். துறை சார்ந்த சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே முறையான நடவடிக்கை எடுத்து அடுத்த கூட்டத்தில் அனைவரும் வர ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். திருவதேவன் சுதாகர் பேசும்போது 15 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இப்பகுதி மக்களுக்கு பொது கழிப்பறை வசதி கட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஆணையர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள், மு.ராஜலட்சுமி, ரா.அமுதா, ர.அருந்ததி, நா.சாகுல் ஹமீது, க.செய்யது முகமது, த.அழகுமீனா, அதிமுக உறுப்பினர்கள், செ.கவிதா, ம.உமா, சிவ.மதிவாணன், து.மீனவராஜன், ப.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் சு.ரமேஷ் (கி. ஊ) நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4