நொய்யல் நதி தூர்வாரும் பணியை துவக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதி தூர்வாரும் பணியை துவக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 158 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் நொய்யல் நதியை ரூ.230 கோடி மதிப்பில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் பெரியசாமி இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதியை தூர் வாரும் பணியை துவக்கிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும், இதனால் சுமார் பத்து ஆண்டுகளாக நீர் ஆதாரம் இல்லாமல் இருந்த பகுதிகளில் நீர் ஆதாரம் பெற வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் நான்கு மாவட்டங்கள் பயன்பெறும் மேலும் இதனால் அணைக்கட்டுகள் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகம் பெற்று பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =