தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி ஆட்டோ ஸ்டேண்டு, பெரியார் பூங்கா ஆட்டோ ஸ்டேண்டு, எழில் நகர் ஆட்டோ ஸ்டேண்டு, அரியூர் ரயில்வே கேட் ஆட்டோ ஸ்டேண்டு, மலைகோடி ஸ்ரீபுரம் ஆட்டோ ஸ்டேண்டு, ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே!! ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 7,500 நிவாரணம் வழங்கிட கோரியும், ஆட்டோவில் இரண்டு பயணிகளை அனுமதிக்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட செயலாளர் சீ.அ.சிம்புதேவன் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 − 51 =