தஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்

தஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

எல்ஐசி முகவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும், முகவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மன்ற முகவர்களுக்கு நிபந்தனைகள் இல்லா முழு தளர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் எல்ஐசி கோட்ட அலுவலகம் வாயிலில் சிஏபி கிளை லிகாய் சங்கம் சார்பில் எல்ஐசி முகவர்கள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியும் கருப்பு பட்டை முககவசம் அணிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கோட்ட தலைவர் தங்கமணி தலைமையில் மாநில செயலாளர் ராஜா, சிஏபி கிளை நிர்வாகிகள் புகழேந்தி, ரமேஷ், ஸ்ரீதர், தேசிகன் மற்றும் முகவர்கள் பால்ராஜ், ராஜேந்திரன், பானுமதி, பிரதீபா, பிரியா, சரபோஜி, காமராஜ், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைப்போல் பட்டுக்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ரகுபதி தலைமையில் மாநிலத்தலைவர் பூவலிங்கம் கண்டன உரையாற்றினார். இதில் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பஞ்சாட்சரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் கோட்டத்தில் இதைப்போல் 25 இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் லிகாய் சார்பாக இந்தியா முழுவதும் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு முகவர்கள் அமைதியான முறையில் தனி மனித இடைவெளி விட்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 7