சின்னமனூர் அருகே ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட அடிக்கல்லை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஏரசக்கநாயக்கனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சமும், மாவட்ட கவுன்சிலர் நிதியில் ரூ.20 லட்சமும், ஒன்றிய கவுன்சிலர் நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட அடிக்கல்லை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார். உடன் சின்னமனூர் அண்ணா தி.மு.க.ஓன்றியச் செயலாளர் விமலேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 6 = 13