இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா – பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது.

சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 24 மணி நேர காலப்பகுதியில் 7,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும், கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆகும் என கூறப்பட்டு உள்ளது

மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்து உள்ளது. 71,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 4,706 ஆக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 4 =