ஆற்காடு துப்­பாக்கி கடத்தலில் மேலும் 3 பேர் கைது

ஆற்­காடு பகு­தி­யில் சட்­ட வி­ரோத­மாக நாட்­டுத்­துப்­பாக்கி கடத்­திய வழக்­கில் ஏற்­கனவே 3 பேர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் தற்போது மேலும் 3 பேர் கைதா­கி­யுள்­ளனர்.

வேலூர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செவ்வாய் கிழமையன்று இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேலூரிலிருந்து பைக்கில் வந்த 2 பேர் ஒரு பார்சலை காரில் வந்தவர்களிடம் கொடுத்தனர். இதனை கண்ட போலீசார் அங்கு சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் சுதாரித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் காரில் சென்றவர்களை வாலாஜா பெரிய மசூதி அருகே மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் வயசு 29 அன்பு மகன் பூரணச்சந்திரன் வயசு 20 என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பார்சலில் பார்த்தபோது 9mm நாட்டுதுப்பாக்கி மூன்று தோட்டாக்கள் மற்றும் 2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடங்கினர்.

மேலும் இராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் அனுப்பி வைத்தது தெரியவந்தது. காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் தேவா வயது 30 நாட்டுதுப்பாக்கி வேட்டு பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் வட்டத்தைச் சேர்ந்த சுதாகர் அவரிடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யப்பட்ட நாட்டுதுப்பாக்கி பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் ரகத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நாட்டு கைத்துப்­பாக்­கியை கைமாற்­றிய வழக்­கில் ஏற்கனவே ரவுடி தேவா உட்பட 3 பேர் கைதா­கி­யுள்­ளனர். இந்­நி­லை­யில் மேலும் ஸ்ரீபெ­ரும்­பு­தூர் பகு­தியை சேர்ந்த கோபி(வயது31), வேலூர் பகு­தியை சேர்ந்த சத்யராஜ்(வயது 32), சுதா­கர்(வயது 31) ஆகிய 3 பேரை வாலாஜாபேட்டை போலீ­சார் கைது செய்­துள்­ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =