அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் வழங்கினார்

அறம் மக்கள் நலச்சங்கத்தின் 2 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான சு.ராஜாவின் 47வது பிறந்த நாளையொட்டி சேவை நாளாக அறிவித்து தமிழகம் முழுவதும் 2 லட்சம் மக்களுக்கு அரிசி வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக தலைவர் சு.ராஜாவின் ஆணைக்கு இணங்க, பெரம்பலூர் மாவட்டதில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனிகளுக்கும் மற்றும் ஊரடங்கு காரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த ஏழை, எளிய பொதுமக்கள் என 2000திற்கும் மேற்பட்டவருக்களுக்கு பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ் குமார் தலைமையில், மாநில துணைத்தலைவர் இளங்கோவன் இணைந்து அரிசி தொகுப்பினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் விஜயக்குமார், தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருப்பதி ராஜ், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், சேரலாதன், காசிராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1