வேலூர்பாலாறின் குறுக்கே பாலம் அமைக்­கும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் – எடப்பா­டிக்கு துரை­மு­ரு­கன் கடி­தம்

பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்­கும் திட்­டத்தை உடனே தொடங்க வேண்­டும் என முதல்­வர் எ­டப்பாடி பழனி­சாமிக்கு துரை­முருகன் கடி­தம் எழுதியுள்­ளார்.

தி.மு.க பொருளாளரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி துணைத்­த­லை­வருமான துரை­முருகன் எம்.எல்.ஏ., தமிழக முதல்­வர் எடப்­பாடி பழனி­சாமிக்கு ஒரு கடி­தம் எழுதியுள்­ளார். அவர் எழு­தியுள்ள கடி­தத்­தில் கூறியிருப்பதாவது:- காங்­கே­யநல்லூர்   மற்­றும் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவ­லகம் வரை­யில் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டத்தை சட்­ட­மன்­றத்தில் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்­கப்ப­ட­வில்லை . அதே­போல் பொன்னையாற்றில் குகை­யநல்லூர் அருகே செக்­டேம் அமைக்கும் பணியும் அறிவிப்­பா­கவே உள்­ளது. மக்­க­ளின் நலன்­க­ருதி உட­னடியாக இந்த திட்­டங்­களை நிறை­வேற்­ற­ வேண்டும். இவ்­வாறு கூறியிருந்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 73 = 74