புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை பகுதியில் இடி மின்னலுடன் கன மழை

புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை மற்றும்   அதனை சுற்றியுள்ள ப்குதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் அனல்  காற்று கொளுத்தி வந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (மே-28) முடிவடைகிறது. இதனையொட்டி வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணி முதல் புதுக்கோட்டை,  திருமயம், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன்  கனமழை பெய்தது.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம்

கந்தர்வகோட்டை பகுதியில் ஆதனக்கோட்டை கோமாபுரம் வளவம்பட்டி காட்டு நாவல் குளத்தூர் நாயக்கன்பட்டி கள்ளுக்காரன் பட்டி வடுகப்பட்டி பழைய கந்தர்வகோட்டை பிசானத்துார் அரவம் பட்டி வேலாடிபட்டி கல்லாக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் இடியுடன் நல்ல மழை பெய்தது.

திருவரங்குளம்

அதபோல் திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை நகர், திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் இன்று மதியம் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் இடைவிடாது மழை அரை மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. மழையின் இடையே பலத்த இடி மின்னல் ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து ஜில் என்ற குளிர்காற்று வீசுகிறது. இந்த கனமழையால் புதுக்கோட்டை பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − 37 =