வாழப்பாடியில் மின்கம்பியில் மோதியதால் இளைஞர் பலி

வாழப்பாடியில் மின்கம்பியில் மோதியதால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மொபைல் எக்ஸ்பிரஸ் செல்போன் கடை ஊழியர் அஜித். இவர் பெரிய மாரியம்மன் கோவில் பெத்தநாக்கன்பாளையம் சேர்ந்த கடையில் டிஜிட்டல் போர்டை தூக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் மோதியதால் அதே இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.

மேலும் வாழப்பாடி காவல்துறையினர் சிவசக்தி, எஸ்.ஐ.தாமோதிரன் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 + = 60