அயோத்தியாபட்டணம் அருகே வேஸ்ட்பஞ்சு குடோனில் தீ

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த வலசையூரிலுள்ள தனசேகரன், சிவகுமார், சுந்தரவேல் ஆகியோருக்கு சொந்தமான தனியார் ஸ்பின்னிங் மில்லில் உள்ள வேஸ்ட்பஞ்சு குடோனில் தீ ஏற்பட்டது. 144 தடை உத்தரவு காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளதால், வேஸ்ட் பஞ்சு சிறிய அட்டை குடோனில் அதிக அளவில் சேகரித்து வைத்துள்ளனர் . சிறிய அட்டை குடோனில் அதிக அளவில் வேஸ்ட் பஞ்சு சேகரித்து வைத்ததால், வெயிலின் தாக்கத்தால் அட்டை வெப்பமாகி, குடோனில் அதிக அளவில் சேகரித்து வைத்திருந்த வேஸ்ட் பஞ்சுகள் வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த தனியார் ஸ்பின்னிங் மில்லில் அவசர உதவிக்கு தீ பாதுகாப்பு கருவிகள் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் அதிக அளவில் பரவியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதி வேஸ்ட்பஞ்சு குடோனாக இருந்ததால், இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு தீ காயம் ஏதுமின்றி விபத்து தவிர்க்கப்பட்டது.

சிறிய அறையில் அதிக அளவு வேஸ்ட் பஞ்சுகள் இருந்ததால், தீ அதிக அளவில் பரவத் தொடங்கியது. இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களை கொண்டு தீயணைக்கும் பணியை தொடந்தனர். மேலும் 10 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

42 + = 51