5,400 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்ய இலக்கு : கால்நடை பராமரிப்புத் துறை தகவல்

கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் காப்பீடு செய்ய 5,400 கால்நடைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளா்ப்போா் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்று வேலூா் மண்டல கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 5,400 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள கால்நடை வளா்ப்போா் 70 சதவீத மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள கால்நடை வளா்ப்போருக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

இரண்டரை ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள், ஓராண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படும். ஓராண்டு காப்பீட்டுக் கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், ஓராண்டு காப்பீட்டுக் கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடையாக உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா், அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 25 =