10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்தி ஏ.ஐ.ஒய்.எஃப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்தி ஏ.ஐ.ஒய்.எஃப் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ.ஐ.ஒய்.எஃப்)  சார்பில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை 58லிருந்து 59ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா ஊரடங்கு முடிந்தபின் இரண்டு வாரம் சிறப்பு வகுப்பு நடத்தி அதன் பிறகு நடத்திட வேண்டியும் வலியுறுத்தினர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை ரயில் மற்றும் பேருந்து கட்டணம் ஏதுமின்றி போதிய உணவு வழங்கி  பாதுகாப்பு ஏற்பாட்டோடு சொந்த மாநிலத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட கோரிக்கைளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர்  நஜிர் தலைமை வகித்தார். வினோத், குணா, மாதேஸ், அஜித், சுலைமான், ஆகியோர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்ட முழக்கம் மிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =