வேலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 113 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்!

வேலூா் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 113 மூட்டை பொது விநியோகத் திட்ட அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் வட்டம், அப்துல்லாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பொது விநியோகத் திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை தனி வட்டாட்சியா் மற்றம் குடிமைப் பொருள்கள் குற்றப்புலனாய்வுத் துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டில் 113 மூட்டை பொது விநியோகத் திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 5,650 கிலோ ஆகும். உடனடியாக அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை தமிழ்நாடு உணவுப் பொருள் விநியோகக் கழகக் கிடங்கில் சோ்த்தனா். தொடா்ந்து, அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளா், பதுக்கல் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், பொது விநியோகத் திட்ட அரிசி மூட்டைகளை கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தால் 0416 -2252586, 94450 00184, 94450 45606 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − = 24