வீட்­டில் மொட்­டை­ய­டித்து விட்டு கோவில் திறந்த பின்னர் முடியை செலுத்தலாம் – திருப்­பதி அறங்­கா­வ­லர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி, வேலூ­ரில் பேட்டி

திருப்­பதி தேவஸ்­தான ஊழி­யர்­க­ளின் சம்­பளத்­தில் எந்­தக் குறை­பா­டும் இல்­லையொன்று திருப்­பதி தேவஸ்­தான அறங்­காவ­லர் குழு உறுப்பினரும், தமிழ்­நாடு திருப்­பதி தேவஸ்­தான ஆல­யங்­களின் தலைவ­ரு­மான சேகர்ரெட்டி தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து நிரு­ப­ருக்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறி­ய­தா­வது : ஊரடங்­கால் திருப்­பதி கோவிலுக்­குள் பக்­தர்­கள் அனுமதிக்கப்படவில்லை. பிர­த­மர் மற்­றும் ஆந்­திர முதல்­வ­ரின் அனுமதி கிடைத்­த­வு­டன் நாள் ஒன்­றுக்கு 6 முதல் 10 ஆயி­ரம் பக்தர்களை அனு­ம­திக்க திட்­ட ­மிட்டுள்ளோம் . சமூக இடைவெ­ளி­யு­டன் பக்­தர்­கள் கோவி­லுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். லட்டு மருத்­து­வக்­குழு ஒன்று பக்­தர்­களை தீவிர உடல் பரி­சோதனை மேற்­கொண்ட பிறகே பக்­தர்கள் உள்ளே நுழைய ஏற்­பாடு செய்து வரு­கி­றோம்.

தமிழ­கத்தில் உள்ள அனைத்து திருப்­பதி தேவஸ்­தான மையங்­க­ளி­லும் ரூ.25–க்கு லட்டு வழங்க தமி­ழக முதல்­வ­ரி­டம் அனு­மதி கோர முடிவு செய்­துள்ளோம். திருப்­பதி கோவி­லில் சாதா­ரண நாட்­க­ளில் நாள் ஒன்றுக்கு உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி­யா­க­வும், விசேஷ நாட்களில் ரூ.4கோடி­யா­க­வும் இருக்­கும். தற்­ச­ம­யம் பக்­தர்­கள் காணிக்கை செலுத்த இ–டொனேசன் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது. தேவஸ்­தான ஊழி­யர்­களுக்கு எந்தவிதத்­தி­லும் சம்­பள குறைபாடு ஏற்­படவில்லை.

மேலும் முடிகாணிக்கை செலுத்­து­ப­வர்­கள் தற்­போது அவரவர் வீடுகளிலேயே முடியை எடுத்து விட்டு கோவில் திறக்­கப்­பட்ட பிறகு அதனை காணிக்­கை­யாக செலுத்­தலாம். இவை அனைத்­தும் மத்­திய, மாநில அர­சு­க­ளின் அனு­ம­திக்­குப் பிறகே நடைமுறை படுத்­தப்­ப­டும். இது குறித்து வரும் 28–ந்தேதி வீடியோ கான்­பி­ரன்ஸ் நிர்­வா­கக்குழு கூட்டம் நடைபெற­வுள்­ளது. அதில், முக்­கியமுடி­வு­கள் எடுக்­கப்­ப­டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 75