விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் வழங்கப்பட்டது.

ஆற்காடு ஒன்றியம் மேச்சேரி ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு மானிய விலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டா் வழங்கும் நிகழ்ச்சி மேச்சேரி கிராமத்தில் நடைபெற்றது.

இதில் ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சௌமியா தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் சங்கீதா, உதவி அலுவலா்கள் சுரேஷ், மகேஷ் தெய்வசிகமணி ஆகியோா் முன்னிலையில் உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு டிராக்டா் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 86