மதுரை கோச்சடையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பிகேஎம்என்.மாரிமுத்து தலைமையில் 22வது வார்டு பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் மற்றும் அரிசி காய்கறி வழங்கப்பட்டது.
இதனை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். உடன் மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் எம்எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, பகுதி செயலாளர் கருப்புசாமி, கணேசன், முத்துராமலிங்கம், ரவி, முனியாண்டி, கருப்பு, எஸ்ஆர்.ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.