மணப்பாறை நகராட்சிக்கு கரூர் எம்.பி ஜோதிமணி கொரோனா கிருமி நாசினி தெளிப்பான் மிசின் வழங்கி 500 பேருக்கு நிவாரண பொருள் வழங்கினார்

மணப்பாறை நகராட்சிக்கு கரூர்  பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கொரோனா கிருமி நாசினி தெளிப்பான் மிசின் வழங்கி 500 பேருக்கு நிவாரண பொருள்களை எம்.பி ஜோதிமணி   வழங்கினார்.

நகராட்சி ஆணையர் பொறுப்பு முத்துவிடம் கொரோனா கிருமி நாசினி தெளிப்பான் மிசின் சாவியை எம்.பி.ஜோதிமணி வழங்கியும் தூய்மை பணியாளர்களுக்கு முககவசமும் கிருமி நாசினி தெளிக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கினார். 

தொடந்து மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஒட்டுனர்கள், நாடக கலைஞர்கள், கிரம்மிய கலைஞர்கள் ஐநூறு பேருக்கு  அரிசி மளிகை பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் திமுக நகர செயலாளர் கீதா மைக்கல் ராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி, தலைமை கழக  காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் செல்வா, மாநில பொதுகுழு உறுப்பினர் கணபதி, சிபிஐ நகர செயலாளர் ஜனசக்தி, உசேன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி, ராகமத்துனிஷா, நல்லுச்சாமி, சின்னத்துரை, மதிமுக மாநில தேர்தல் பணி செயலாளர் தமிழ் மாணிக்கம், நகர செயலாளர் முத்துப்பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால், நகர செயலாளர் சத்தியசீலன், உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − 52 =