மணப்பாறையில் இருபத்தி ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐடி.யூ.சி. முழக்க ஆர்ப்பாட்டம்

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஆர்.வி.பி.மன்ற வாளகத்தில்  ஏ.ஐ.டி.யூ.சி இருபத்தி ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புச்சாரா கட்டுமன தொழிலாளர்கள் சங்க தாலுகா பொது செயலாளர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். எமது நாட்டின் மதிப்புக்குரிய ஜனாதிபதியே! தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை ஏற்காதீர்!

தொழிலாளர் உரிமையை பறிக்காதே! தொழிற்சங்கத்தை நசுக்தே நான்கு தலைமுறை போராடி வென்றெடுத்த சட்டங்களை கொரோனாவின் பேராலே பறித்துவிட சங்கம் சேரும் உரிமையினை, தட்டிப் பறிக்க விடமாட்டோம். ரத்தம் சிந்திப் பெற்றிட்ட, எட்டு மணி நேர வேலையினை 12 மணியாய் நீட்டாதே. புதிய மின்சார மசோதாவை திணிக்காதே! விவசாய வேலை செய்வதற்கு, விலையில்லாத மின்சாரத்தை கொடுத்து வருவதைத் தடுக்காதே! களத்தில் இறங்கிப் போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்போம்!

மேலும் பொதுத் துறையை தனியாருக்கு விற்காதே! ரயிலைக் கூட தனியாருக்க விற்கும் முடிவை நிறுத்திடுக. பள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்க ஆஸ்பத்திரியை, தனியாரிடம் விற்றுவிட்டால் ஏழை மக்கள் எங்கே போவோம். பொது முடக்க காலத்திற்கு, தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்தை கொடுத்திட செய்!
கட்டுமான தொழிலாளிக்கும், உடலுழைப்பு தொழிலாளிக்கும், மாதம் ரூபாய் 7500 நிவாரண நிதியாய் வழங்கிடு! டோக்கன் அடித்துக் கொடுத்துவிட்டு, சாராயம் விற்கும் சர்க்காரே! அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுக்க ஆயிரம் நிபந்தனை போடாதே. ஆயிரம் ரூபாய் போட்டதாக, அறிவிக்கின்ற அமைச்சர்களே வங்கிக் கணக்கில் ஏறலையே போடாத. பணம் என்னாச்சு வாரிய அட்டை வைத்திருந்தால், உடனடியாக நிதி வழங்கு. புதுப்பிக்கவில்லை என்று கூறி நிவாரணம் தந்திட மறுக்காதே.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, போலீசை விட்டு தாக்காதே. முதலாளிகளின் தயவுக்காக விலங்குகள் போல நடத்தாதே. கொத்தடிமைகளாய் ஆக்காதே சொந்த ஊர் திரும்புவதற்கு, போக்குவரத்து வசதி செய்து கொடு! துப்புரவுப் பணியாளருக்கும், மருத்துவமனை பணியாளருக்கும், கேஷுவல் காண்ட்ராக்ட் பார்க்காமல், திட்ட ஊழியரை ஒதுக்காமல், சிறப்பு ஊதியம், இழப்பீடு வழங்குவதற்கு ஆணையிடு!

துப்புரவு பணியாளருக்கு, பாதபூஜை செய்கின்ற, மாநில மத்திய அமைச்சர்களே, நிரந்தரப் படுத்தி ஊதியம் வழங்க உடனடியாக ஆணையிடு! உயிரைக்கூட பணயம் வைத்து, கிருமித் தொற்றுக் காலத்தில் பணி செய்திட்ட ஊழியர்களுக்கு, தொழிலாளர்களின் வாழ்த்துக்கள்! காவல்துறைக்கும், மருத்துவத் துறைக்கும், மாநில அரசுப் பணியாளர்களுக்கும், பொதுத்துறையின் ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை நிறுத்துகிற, அரசின் முடிவை கைவிடுக! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக! அடிமைப்படுத்தும் சதியை எதிர்த்து, ஒன்றுபடுவோம்! போராடுவோம்! என்றுமுழக்கம் மீட்டனர்.

விராலிமலை சாலை வடக்கு லெட்சுமிபுரம், காந்திநகர், திரம்பட்டி, நெச்சிமேடு, மஞ்சம்பட்டி, இடையபட்டியான்பட்டி உட்பட தொழிலாளர்கள் இல்லங்களிலும் முழக்கமிட்டணர். ஏ.ஐ.டி.யு.சி. தாலுகா செயலாளர் ஜனசக்தி உசேன் சின்னதுரை பெருமாள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 72