பொன்னமராவதி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திருச்சி மண்டல உதவி இயக்குநர் (பொ)மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பையா பொன்னமராவதி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் 3நாட்களுக்கான அளவில் வழங்கினார்கள்.

மேலும் உடன் பேரூராட்சி செயல்அலுவலர் தனுஷ்கோடி,  இளநிலை உதவியாளர்கள் கனகமுத்து,  ரேணுகாதேவி, சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். உதவி செயற்பொறியாளர் அவர்கள் பாலமுருகன் கோவில் தெருவில் உள்ள மினரல் வாட்டர் ப்ளாண்ட்டை பார்வையிட்டு  பழுது நீக்கம் செய்ய உரிய ஆலோசனைகள் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 1