பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் 27 நபரை ராஜஸ்தானுக்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வெளிமாநிலத்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 24 நபர்கள், குழந்தைகள் 3 நபர்கள் என மொத்தம் 27 நபர்களை அவருடைய சொந்த மாநிலத்திற்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு பொன்னமராவதி பேரூராட்சி வளாகத்தில் முதலுதவி சிகிச்சை மற்றும் வெப்பநிலை கண்டறியும் சிகிச்சை முதலுதவி செய்யப்பட்டு பின்பு அவர்களுக்கு தேவையான காலை மற்றும் மதிய உணவு வழங்கி பின்பு அவர்களை திருச்சி மூகாம்பிகை கீரனூர் மூகாம்பிகை கல்லூரிக்கு தனியார் பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். 

பின்பு அங்கு அவர்களை உரிய சிகிச்சை வழங்கிய பின்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.  இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரகாஷ்,  கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, ரமேஷ், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பேரூராட்சி பணியாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்கி அனுப்பி வைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − = 43