பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக்கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி தலைமை வகித்தார்.

ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் வரதராஜன் வரவு செலவு தீர்மானங்கள் வாசித்தார். இதில் திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி கலந்துகொண்டு பேசினார். அதில் புதிதாக தேர்வுபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கொரோனோ தடுப்பு பணி மிகப்பெரிய சவாலக அமைந்தது. இந்த பணிக்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசு அலுவலர்களின் முழவீச்சு பணிகள் போன்று கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் மக்கள் பிரதிநிதிகளும் சவாலன பணிகளை எதிர்கொள்ள வேண்டும். மகராஸ்ட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள், சென்னை கோயம்பேட்டு பகுதிகளில் வந்தவர்களை  அரசு அக்கறையோடு செயல்ட்டிருந்தால் அவர்களை தனிப்படுத்தி இருக்கவேண்டும். அவ்வாறு செய்யாததால் அவர்கள் இஷ்டத்திற்கு  எல்லா இடத்திற்கு சென்று பரப்பிவிட்டனர்.

மேலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏழை எளியோருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். கொரோனோவை  ஒழித்து விரட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருமயம்  எம்எல்ஏ ரகுபதி பேசினார்.

இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன், மாவட்டக் கவுன்சிலர் பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, முருகேசன், பழனியாண்டி, மாணிக்கம், பழனிச்சாமி, பழனியப்பன், பிரியங்கா, சிவரஞ்சனி, ஆதிலெட்சுமி, ரத்தினம், வளர்மதி, விஜயா, செந்தில், கல்யாணி, வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவியாளர் கதிரேசன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =