பெருங்குடியில் கொரோனா நிவாரணப்பணி

புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் ஒன்றியம் பெருங்குடி பஞ்சாயத்தில் சிறுதானியங்கள் அடங்கிய நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச், லடாஸ் அமைப்பு மற்றும் கோவை அக்கறை அறக்கட்டளை இணைந்து, அரிமளம் ஒன்றியத்தில் கொரோனாவால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத 275 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

சிறு விவசாயிகள், பெண்கள், வயதானோர்கள், பஞ்சாலைகளில் வேலை செய்த வளரிளம் பெண்கள், தூய்மை பணியாளர்கள் போன்றோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பெருங்குடி, பூவம்பட்டி, கொல்லக்குடி கிராமங்களை சார்ந்த 275 குடும்பங்களும் சமூக இடைவெளியுடன் நிவாரணப்பொருட்களை வாங்கிச்சென்றனர்.

ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் கூறுகையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானிய அரிசிகள், சிறுதானிய சத்துமாவு, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், நாட்டுச்சர்க்கரை, நிலக்கடலை, மளிகைப்பொருட்கள் மற்றும் சோப்பு உள்ளிட்ட பொருட்களும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 11 வகையான காய்கறிகளும் நிவாரணப்பொருட்களாக வழங்கப்பட்டன.

குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. மேலும், அரிமளம் ஒன்றியத்தில் உள்ள 1000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இதில் ரோஸ் நிறுவன இயக்குநர் ஆ.ஆதப்பன், பெருங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், பொன்.சுந்தரேசன், ரோஸ் நிறுவன பணியாளர்கள் அகிலா, விஜயா, சுமதி மற்றும் ரோஸ் இளையோர் அமைப்பின் சரவணன், மணிகண்டன், சுந்தரபாண்டி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 28 =