நெமிலி அருகே காஞ்­சி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபரின் மகன் வெட்­டிக் கொலை‌?

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் படாளம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் தனஞ்செழியன். இவர் அப்­ப­கு­தி­யில் சொந்­த­மாக கோழிப்­பண்ணை வைத்து நடத்திவரு­கி­றார். இவ­ருக்கு பாரதி (வயது 24) என்ற ஒருமகன் இருந்­துள்­ளார். இவர் காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்த பிர­பல ரவுடியான ஸ்ரீதரின் கூட்­டா­ளி­யாக வலம் வந்­துள்­ளார் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்நி­லையில் காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் வாலா­ஜாபாத் அடுத்த அங்கம்பாக்­கம் பகு­தியை சேர்ந்த சங்­கீதா (வயது 19) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்க­ளுக்கு முன்பு பாரதி காத­லித்து திருமணம் செய்­துள்­ளார்.

மேலும் பார­தி­யின் பாட்டி வீடு அரக்­கோ­ணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ்வெங்­கடா­பு­ரம் பகு­தி­யில் அமைந்­துள்­ளது. எனவே பாட்­டி­யின் வீட்­டிற்கு தனது காதல் மனைவி சங்­கீ­தா­வு­டன் பாரதி நேற்று வந்துள்ளார். பாட்­டி­யின் வீட்­டில் இருந்த போது இரவு 10 மணி அள­வில் பார­தி­யின் செல்போ­னுக்கு அழைப்பு வந்ததை அடுத்து பாரதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிலர் பார­தியை அரிவாளால் சர­மாரியாக வெட்டி­விட்டு அங்கிருந்து தப்­பிச் சென்றுள்ளனர் என்பது விசா­ர­ணையில் தெரியவந்தது.

பார­தியின் உடலை வேலூர் அடுக்­கம்­பாறை அரசு மருத்துவம­னைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீ­சார் தீவிர விசா­ரணை நடத்தி வருகின்றனர். இதில் கீழ்வெங்­க­டாபு­ரம் பகுதி­யைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலி­பரை போலீ­சார் கைது செய்­த­னர். மற்­ற­வர்­களை தேடிவருகின்­ற­னர்.

காதல் விவ­கா­ரத்­தால் பாரதி கொலை செய்­யப்­பட்­டாரா, அல்­லது ரவுடி கும்­ப­லால் பழிக்­குப்­பழி நட­வடிக்கை­யாக இந்த படு­கொலை நடந்து உள்­ளதா என்ற கோணங்­களில் விசா­ரணை நடந்து வருகிறது. இதனால் நெமிலி பகுதியில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்டுள்­ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2