நாமக்கல் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திசெல்வன் வழங்கினார்

கழகத்தலைவர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல், கொசவம்பட்டி, தேவேந்திரபுரம் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திசெல்வன் வழங்கினார்.

கொரோனா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல், கொசவம்பட்டி, தேவேந்திரபுரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி, காய்கறிகள் தொகுப்பு மற்றும் முட்டைகளை முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திசெல்வன் வழங்கினார்.

மேலும் உடன் நகர கழக பொறுப்பாளர் ராணா.ஆர்.ஆனந்த், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பால் ரவிச்சந்திரன், ரமேஷ் அண்ணாதுரை, கழக மூத்த முன்னோடி முத்து, வார்டு செயலாளர்கள் செல்வராஜ், கந்தசாமி, பிரதிநிதி பாபு, மகளிரணி காமாட்சி, மல்லாயி (எ) சௌந்தரராஜன், தினேஷ், பிரபாகரன், சுரேஷ், பொன்சேகர் மற்றும் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 − = 60