திருப்பத்தூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, அருகே உள்ள அகதிகள் முகாமில் இருந்து வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், நலிவடைந்தவர்கள் என சுமார் 320 நபர்களுக்கு அரிசி மளிகை உட்பட 1000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பினை சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் குழுவும், மற்றும் திருப்பத்தூர் நீதிமன்றமும் இணைந்து நிவாரணப் பொருள் வழங்கியது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பாபுலால், சட்டப் பணிக்குழு செயலாளர் மோகனா, திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, திருப்பத்தூர் தொகுதி ஒன்றிய குழு பெருந்தலைவர் சண்முகவடிவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம அலுவலர் அனைவரும் பங்கேற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கான நன்கொடைகளை காரைக்குடி கோட்டையூர் வீரப்ப செட்டியார் மற்றும் திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வழக்கறிஞர் முருகேசன் ஆகியோர் இணைந்து வழங்கினர். மேலும் நிகழ்ச்சியை சட்ட பணிக்குழு உதவியாளர் கோடீஸ்வரன் சமூக இடைவெளி யோடு ஒருங்கிணைப்பு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2