திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று அதிகாலை கைது

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  ஆர்.எஸ் பாரதி பேசியது  சர்ச்சையை கிளப்பியது. 

ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார்.  இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  மருத்துவ பரிசோதனைக்காக  ஆர்.எஸ் பாரதியை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =