சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு அதிகாரிகளுடன் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை மற்றும் குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம், சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் சொந்த ஊரான எடப்பாடி அடுத்து சிலுவை பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார். அங்கு அதிமுக சார்பில் கொடுக்கப்படும் நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப் படுகிறதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − = 52