எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.க. அஞ்சாது : மு.க.ஸ்டாலின்

எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஆர்.எஸ் பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த  ஆர்.எஸ் பாரதி மீதான மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து  கைது செய்துள்ளார்.  எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =