உலகளவில் 53 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3.39 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் 5,298,207 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,156,291 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 339,418 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மேலும் 44,583  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118,447 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,583 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 48,534 பேர் குணமடைந்தனர்.  

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =