இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணமே அரசுக்கு இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணமே அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் சூரணம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஜிங்க் மாத்திரைகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.

மதுரை பெத்தானியாபுரத்தில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் :- மதுரையில் வாழும் 4 லட்சம் குடும்பங்களில் இதுவரை ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மதுரை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நம்மை விட்டு விலகும் வரை பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வருவதை தவிர்த்து நீண்ட நாள்கள் பாதுகாப்புடன் இருக்க கற்று கொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணமே அரசுக்கு இல்லை, விவசாயிகளின் நண்பனாக திகழும் தமிழக முதல்வர் எடப்பாடியார் எப்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வார். காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் இருக்கிறோம் என்பதை காண்பிக்க போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஒச்சாத்தேவர், செந்தில், சசி குமார், சித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2