அஇஅதிமுக தலைமையிலான அரசின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற அலுவலத்தில் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் இனிப்புகளை வழங்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு வெற்றிகரமாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வழியில் இன்று ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல் நாளை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வெங்குபட்டு சம்பத் தலைமையில் கழக தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திரு உருவத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வழிபட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது சோளிங்கர் நகர செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்ஜிஆர் பாசறை விஜயன், மாவட்ட அவைத்தலைவர் சுவாமி மற்றும் இதர கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சமூக இடைவெளி கடைப்பிடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)