பேராவூரணியில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள கம்யுனிஸ்ட் அலுவலகத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி பொறுப்பாளர் கே.எஸ் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ,வாரியத்தில் பதிவு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிடு, வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கிடு, தொழிலாளர் நல உரிமைகளை பறிக்காதே, 8 மணி நேர வேலை உரிமையை மாற்றாதே, பொதுத்துறைகளை தனியாருக்கு விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் வி.ராஜமாணிக்கம், நகர செயலாளர் எம்.சித்திரவேல், மாதர் சங்கம் எம்.நீலாவதி, ஏஐடியுசி நகர செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 72 = 76