பெட்­ரோல், டீசல் விலையை குறைக்க வேண்­டும் – பஸ் உரிமையாளர் சங்­கம் கோரிக்கை

பெட்­ரோல் மற்­றும் டீசல் விலையை லிட்­ட­ருக்கு ரூ.20 குறைக்க வேண்­டும் என வேலூர் மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மையா­ளர்கள் சங்கதலை­வர் சுப்­பி­ர­மணி அரசுக்கு கோரிக்கை விடுத்­துள்ளார். இது குறித்து அவர்வேலூ­ரில் அளித்தபேட்­டி­யில் கூறி­ய­தா­வது:–

கொரோனா பிரச்­ச­னையை அரசு சிறப்பாக கையாண்டு வரு­கின்றது. தமி­ழ­கத்­தில் தனி­யார் பேருந்­து­கள் 50 ஆண்­டு­க­ளாக சிறப்­பான சேவையை மக்க­ளுக்கு அளித்து வரு­கின்­றது. தற்போது பேருந்­து­கள் இயங்கவில்லை என்­றாலும் மக்க­ளுக்கு எங்­களால் முடிந்த உத­வி­களை செய்து வரு­கின்­றோம்.

மத்­திய, மாநில அர­சு­கள் பெட்ரோல், டீசல் லிட்­ட­ருக்கு ரூ.20 குறைக்க வேண்­டும். தனி­யா­ருக்கு பெட்ரோல் துறையை தாரைவார்க்­கா­மல் அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் பேருந்து கட்­ட­ணம் குறைவாக உள்­ளது. தற்போது கொரோ­னாவை கார­ணம் காட்டி பேருந்­து­க­ளில் 20 பேருக்கு மேல் பய­ணிக்­கக் கூடாது என்றுகூறி­யுள்­ள­னர். எனவே அரசு இது குறித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பிர­த­மர் மற்­றும் தமி­ழக முதல்­வ­ருக்கு கடி­தம் அனுப்ப இருக்­கி­றோம். இவ்­வாறு கூறி­னார்.

அப்போது துணைத் தலைவர் விஜ­ய­கோ­விந்­தராஜ், கலை­ம­கள் இளங்கோ, கோவிந்தராஜ் மற்­றும் சீனி­வா­சன் ஆகி­யோர் உட­ன் இருந்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

84 + = 89