நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்தது தமிழக அரசு

நாளை முதல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் நாளை முதல்  தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்  அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்க அனுமதி. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே ஆட்டோவில் அனுமதி. சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது,
போன்ற கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 83