நாட்டின் நிதி நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பேட்டி

நாட்டின் நிதி நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்சனைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.

மேலும் ரெப்போ வட்டி விகிதம் 4%-மாக குறைக்கப்படும். இந்தியாவில் பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகள் 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். முக்கிய தொழில்களின் வெளியீடு 6.5 சதவீதம் சுருங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம். வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு’ ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17% ஆக குறைந்துள்ளது. இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கி முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்ட சக்தி காந்ததாஸ், கோவிட் -19 தொடர்பான சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். “ரிசர்வ் வங்கி விழிப்புடன் இருப்பதோடு, அனைத்து கருவிகளையும் மற்றும் புதியவற்றை பயன்படுத்துகிறது. நிதி அமைப்பு சீராக இயங்குவதற்கும், அனைவருக்கும் அணுகலை உறுதி செய்வதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைக் காப்பதற்கும் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்படுகிறது” என்று கூறி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்தார்.

தொகுப்பு: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 29 = 38