தெலுங்கானாவில் கிணற்றில் மிதந்த 9 தொழிலாளர்களின் சடலங்களால் பரபரப்பு

தெலுங்கானாவில் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் பாழுங் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். இவர்கள் யார் உடம்பிலும் எந்த காயங்களும் இல்லை. அதனால் இந்த 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்து, ஒட்டுமொத்தபேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் புறநகரில் ஒரு கிணறு உள்ள கீசுகொண்டா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு 5 பேர் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று அந்த கிணற்றில் விழுந்து கிடந்தவர்களை மீட்க ஆரம்பித்தனர். நீண்ட நேரம் போராடி 5 பேரின் உடல்களையும் மீட்டனர். இதனிடையே, இன்று காலை கிணற்றில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனால் அவர்களை மீட்கும் பணி நடந்தது. இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர். மேற்கு வங்கம், பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இவர்களில் யார் உடம்பிலும் எந்த காயமும் இல்லை. அதனால் 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வாரங்கால் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் ஒரு பேக் தயாரிக்கும் பேக்டரி இயங்கி வருகிறது. இதற்கு பக்கத்தில்தான் இந்த கிணறு உள்ளது.

இது குறித்து கீசுகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் 20 வருஷத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்தவர்களாம். இந்த 9 பேரில் 3 வயது குழந்தையும், 2 வயது குழந்தையும் அடக்கம் என்பது நெஞ்சை பிசையும் கூடுதல் தகவல் ஆகும். ஒரே கிணற்றில் நேற்றிரவு, இன்றும் என இந்த இரண்டே நாட்களில் 9 பேரின் சடலங்கள் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளர்கள் சுருண்டு மாண்டு வரும் நிலையில், இப்படி, குழந்தை குட்டியுடன் தற்கொலையிலும் ஈடுபட்டு வருவது நாட்டையே அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − 57 =