திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி இன்று பாஜகவில் இணைகிறார்

திமுக துணைப்பொதுச்செயலாளர் விபி துரைசாமி பாஜகவில் இன்று இணைய இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபி துரைசாமியிடம் இருந்து நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது.

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று பாஜகவில் விபி துரைசாமி இணைய உள்ளார். 

திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 9