தமிழகத்தில் விமான சேவையை ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவை தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25ம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 10 =