தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலதிற்க்கு  கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது – பா.ஜ.க சார்பில் ஆட்சியரிடம் மனு

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலதிற்க்கு  கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது என கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் 25 மண்டல தலைவர்களுடன் வந்திருந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கபட்டு உள்ள நிலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லி அலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் நிர்பந்தம் செய்யவதாக இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம சாட்டினார்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்ட பின்னர் 3 மாத கால அவகா அளித்து அவர்கள் பணம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேணும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் கடனுதவி பெற்ற சுயஉதவி குழுவினர் மற்றும் தொழில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதை தவிர்த்து அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − = 55