உலகளவில் 3.34 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி : பாதிப்பு 51.89 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 334,072 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 5,189,178 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,078,557 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,635 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தியா உட்பட 209 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என உலக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − 61 =