அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடம் – இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் இந்தியா ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. உலக நாடுகளில் ஒரே நாள் பாதிப்பில் அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 17,198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 8,849 பேருக்கு கொரோனா உறுதியானது. 3-வதாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 6,029 பேருக்கு கொரோனா உறுதியானது.

உலக நாடுகள் அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,09,921 ஆகும். அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 95,839 பேர் கொரோனாவால் மரணித்து போயுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,17,554 ஆக அதிகரித்திருக்கிறது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளன. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,099 ஆக உள்ளது. கொரோனா மொத்த பாதிப்பில் தற்போது பிரேசில் 3-வது இடத்துக்கு வந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,113 ஆக உள்ளது. பிரேசிலுக்கு அடுத்ததாக ஸ்பெயினில் 2,80,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் இங்கிலாந்து 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 36,042 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு என்பது 19,156 ஆக உள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-வது இடம். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,18,226 ஆகும். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,584. 10-வது இடத்தில் ஈரான் உள்ளது. ஈரானில் 1,29,341 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மொத்தம் 7,249 பேர் ஈரானில் கொரோனாவால் மாண்டு போயினர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். மகாராஷ்டிராவில் 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,454 ஆகும். 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 13,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத் மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 773 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 76