ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.15 கோடி செலவில் 2021–ம் ஆண்டுக்கான குடிமராமத்து பணியின் கீழ் 24 ஏரிகளை தூர்வாரும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 9,038.87 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது. கோடை மழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நெமிலி அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் அமைச்சர் கே.சி.வீரமணி குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, எம்.எல்.ஏ.க்கள் அரக்கோணம் சு.ரவி, சோளிங்கர் சம்பத், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் பெல்.கார்த்திகேயன், செயற்பொறியாளர் சண்முகம், குணசீலன், ஏ.எல்.விஜயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)